தமிழ்நாட்டில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் தொடக்கம்…
தமிழக அளவில் முதல் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய மூன்று நோய்கள் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்த மூன்று நோய்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் பாதித்தவர்கள் தற்காத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Must Read: சென்னை, கோவையில் நடைபெற்ற 2 வேளாண் நிகழ்வுகளின் பதிவு…
குறிப்பாக, சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்தால் பாதிக்கப்பட்ட நபரை எளிதாக குணப்படுத்த இயலும். இதுவே, நோயின் தன்மை அதிகரித்து சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு நிலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

தமிழகத்தில் சிறுநீரகம் பாதித்து, பலரும் சிறுநீரக தானத்துக்காக காத்திருக்கின்றனர். நோய் வருமுன் காப்பது அவசியம். எனவே, சிறுநீரகத்திலிருந்து வெளியேறும் புரதத்திலிருந்து சிறுநீரக செயலிழப்பை கண்டறியும் பரிசோதனை திட்டம் தமிழகத்தில் உள்ள 8,213 அரசு துணை சுகாதார நிலையங்கள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக பாதிப்பு கண்டறியும் பரிசோதனை பெட்டகம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

Comments
View More